மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த தெப்பத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் தெப்பத்திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதனை தொடர்ந்து, விழாவின் சிகர நிகழ்வாக தைப்பூசத் தெப்பத் திருவிழா நடைபெற்றது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேசுவரர் எழுந்தருளினர். இதனை அடுத்து, தெப்பத் தேரினை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து குளத்தை வலம் வந்தனர்.
















