சேலம் அருகே பெண்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட இளைஞரை தாக்குவதற்காக துரத்திய கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.
சேலம் மாவட்டம், பாரப்பட்டியில் நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட குமார் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து பெண்களை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த பாரப்பட்டியைச் சேர்ந்த செல்வா என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து, இருதரப்பு இடையே ஏற்பட்ட மோதலை அப்பகுதி மக்கள் தடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், பழிக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் சென்ற செல்வாவை குமார் தரப்பினர் வாகனத்தில் துரத்தி சென்றுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார், அந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்த செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
















