சர்வதேச அரங்கில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில், சீனாவின் ‘யுவான்’-ஐ உலகளவில் ஒரு வலுவான சக்தியாக மாற்றப் போவதாக அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் 2 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ள சீனா அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க சர்வதேச வர்த்தகத்தில் யுவானின் பயன்பாட்டை அதிகப்படுத்தி வருகிறது.
சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தத்துவார்த்த இதழான கியுஷியில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் சீனாவின் நிதித் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்துவதன் மூலம், யுவான் நாணயத்தை சர்வதேச வர்த்தகம், முதலீடுகளில் ஒரு முக்கிய நாணயமாக நிலைநிறுத்த வேண்டும் என்று ஜி ஜின்பிங் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















