இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் : நினைத்ததை முடித்த பிரதமர் மோடி - சிறப்பு தொகுப்பு!
Feb 4, 2026, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் : நினைத்ததை முடித்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 4, 2026, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா மீதான வரி 18 சதவீதமாக குறைத்து உத்தரவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தமும் இறுதி செய்யப் பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். முதலில் வரி விதித்த ட்ரம்ப் இறங்கிவந்து இந்தியா மீதான வரி குறைத்திருப்பதும் நிறுத்தி வைத்திருந்த வர்த்தக ஒப்பந்தந்தை இறுதி செய்திருப்பதும் உலகையே ஆச்சரியப் பட வைத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் 47 வது அதிபராக பதவியேற்ற உடனேயே சீனா, கனடா மற்றும் மெச்சிகோ உள்ளிட்ட அனைத்து நாடுகள் மீதும் வர்த்தக போரைத் தொடங்கினார் டிரம்ப்… பரஸ்பர வரி விதிக்கும் கொள்கையை முன் வைத்து அனைத்து நாடுகளையும் அதிபர் ட்ரம்ப் வர்த்தக பேச்சுவார்த்தைக்குக் கட்டாயப் படுத்தினார். இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் பூர்வாங்க வேலைகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன.

பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் சென்று அதிபர் ட்ரம்பைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் கடந்த டிசம்பருக்குள் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருநாட்டு தலைவரும் ஒப்புக்கொண்டனர்.
மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், இருதரப்பு வர்த்தகத்தை, 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கவும் இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது.

அமெரிக்காவில் இருந்து எண்ணெய் கொள்முதலை இந்தியா அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார். இதனையடுத்து, கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரு நாட்டு வர்த்தக அமைச்சர்களும் அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தியாவின் அதிக வரிகள் மற்றும் பால் உள்ளிட்ட வேளாண் பொருட்கள் குறித்து அதிருப்தி அடைந்த அமெரிக்கா, வர்த்தக பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்டது.

கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “விடுதலை நாள்” வரித் திட்டத்தை வெளியிட்டார். அதில் அமெரிக்காவுக்கு இறக்குமதி ஆகும் இந்தியப் பொருட்களுக்கு 26 சதவீத வரி விதித்தார். வர்த்தக உடன்பாடு எட்டுவதற்காக, இந்த வரிவிதிப்பு 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவித்தார். அதே ஏப்ரல் 16 ஆம் தேதி, இந்தியாவுக்கு வந்த அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். இருநாடுகளும் முறையான பேச்சுவார்த்தைகளுக்கான விதிமுறைகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் தொடங்கப் படும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

அடுத்த இரண்டு மாதங்களில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடந்த ஜூலை 31 ஆம் தேதி, இந்தியா மீது 25 சதவீத வரி விதித்த அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தாவிட்டால் மேலும் வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார். இதனையடுத்து இரு நாட்டு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டன. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி,கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தார் அதிபர் ட்ரம்ப். மொத்தமாக உலக நாடுகளிலேயே அதிகமாக 50 சதவீதம் வரி இந்தியா மீது விதிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக நியமிக்கப் பட்ட செர்ஜியோ கோர், வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதாக தெரிவித்திருந்தார்.

ஆச்சரியப் படும் வகையில், கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி, இந்தியப் பொருட்களின் மீதான பரஸ்பர இறக்குமதி வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது. அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையே நடந்த தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இந்த வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். மேலும் இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்..

Make in India திட்டத்துக்குப் மிகப்பெரிய வலிமையை இந்த வர்த்தக ஒப்பந்தம் தரும் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் இணைந்து செயல்படுவது உலகத்துக்கே நன்மையளிக்கும் என்று தெரிவித்துள்ளார். சாத்தியமே இல்லை என்று பலரால் கூறப்பட்ட நிலையில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தைத் தனது வைராக்கியதால் சாத்தியமாக்கி உள்ளார் பிரதமர் மோடி என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Tags: H1B visah1b visasus h1b visa newsh1b visa us newsus jobs h1b visaindia us dealPM ModiTrumpUS tariff
ShareTweetSendShare
Previous Post

சென்னை அண்ணா பல்கலைக் கழக விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

சென்னை அண்ணா பல்கலைக் கழக விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

வெனிசுலாவிடம் எண்ணெய் கொள்முதல் : இந்தியா, சீனாவிடம் ட்ரம்ப் கோரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு – காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு சீக்கியர்கள், பாஜகவினர் போராட்டம்!

இந்தியா, அமெரிக்க வர்ததக ஒப்பந்தம் : புதிய சகாப்தத்தை உருவாக்கிய பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

நாட்டிற்காக ரத்தம் சிந்திய குடும்பத்தை சேர்ந்தவரை ‘துரோகி’ என அழைப்பதை ஏற்க முடியாது -ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கண்டனம்!

வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வை தூண்டும் அறிவாலய  தலைவர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் : நினைத்ததை முடித்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

நாளுக்கு நாள் வெளுத்து வரும் திமுக அரசின் போலி சமூகநீதி வேடம் – நயினார் நகேந்திரன்

வேளாண் மற்றும் பால்வளத்துறையில் எந்த சமரசமும் இல்லை – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பியூஷ் கோயல் விளக்கம்!

எனது கால்களை வெட்டிய இடதுசாரிகள் – நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி சதானந்தன் மாஸ்டர் ஆவேசம்!

ராகுலுடன் கை குலுக்க மறுத்த மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் – வாக்குவாதம்!

மக்களவையில் கடும் அமளி – எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை!

உலக புற்றுநோய் தினம் – சென்னையில் விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி!

கோயில்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள் – செல்வாக்கை பயன்படுத்தி அத்துமீறும் அதிகார வர்க்கம்!

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies