கரூரில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது திமுக எம்எல்ஏ பழனியாண்டி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்கு சொந்தமான குவாரி கரூர் மாவட்டத்தில் உள்ளது. அந்த குவாரி சட்டவிரோதமாக செயல்படுவதாக கூறப்படும் நிலையில், அது குறித்து செய்தி சேகரிக்க கதிரவன் என்ற பத்திரிகையாளரும், ஜெபஸ்டின் என்ற ஒளிப்பதிவாளரும் சென்றிருந்தனர்.
அவர்கள் மீது திமுக எம்எல்ஏ உள்ளிட்டோர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி, ஒளிப்பதிவு உபகரணங்களையும் உடைத்தனர். செய்தியாளர்கள் மீதான இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்கள் மீது திமுக எம்எல்ஏ பழனியாண்டி தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
















