உறுதி அளித்துவிட்டு தனக்கு வாக்களிக்கவில்லை எனில் தெய்வம் உங்களை தண்டிக்கும் என வாக்காளர்கள் முன்னிலையில் அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் பேசிய அமைச்சர் துரைமுருகன், தான் அளித்த வாக்குறுதியை செயல்படுத்தாவிட்டால் தெய்வம் தன்னை தண்டிக்கும் என்று கூறினார்.
அதேபோல் உறுதியளித்துவிட்டு தனக்கு வாக்களிக்கவில்லை எனில் தெய்வம் உங்களை தண்டிக்கும் எனவும் வாக்காளர்கள் மத்தியில் துரைமுருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
















