செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 129 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி தரும் வகையில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்திய நிறுத்தி வைத்து, மேலும் ராம்பன் மாவட்டத்தில் செனாப் நீரை பயன்படுத்தி பிரமாண்ட நீர்மின் நிலையம் அமைத்து அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தையும் மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது.
சாவல்கோட் நீர்மின் திட்டத்திற்காக மட்டும் 5 ஆயிரத்து 129 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மின் திட்டத்தின் மூலம் ஆயிரத்து 856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடங்கும் பணிகளுக்கான ஒப்பந்தப்பள்ளி கோருதல் மார்ச் 12-ம் தேதி தொடங்கி மார்ச் 20ம் தேதி ஒப்பந்தபள்ளி கோருவதற்கான காலக்கெடு முடிவடைகிறது.
இதற்கான ஒப்பந்தபுள்ளியை தேசிய நீர்மின் கழகம் வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் இந்தியாவுக்கு நீர்மின் சக்தியும், கூடுதல் தண்ணீரும் கிடைக்கும், அதே சமயத்தில் பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய தண்ணீரின் அளவு கணிசமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
















