கால்வான் மோதலுக்கு பிறகு ரகசிய அணுசோதனை - சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு.. சிறப்பு தொகுப்பு!
Feb 11, 2026, 08:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கால்வான் மோதலுக்கு பிறகு ரகசிய அணுசோதனை – சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு.. சிறப்பு தொகுப்பு!

Manikandan by Manikandan
Feb 11, 2026, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2020ம் ஆண்டில் சீனா தொடர்ச்சியான ரகசிய அணுசக்தி சோதனைகளை நடத்தியதாகவும், அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தங்களை மீறும் நடவடிக்கைகளை மறைத்ததாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான நியூ ஸ்டார்ட் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் காலாவதியான நிலையில், ரஷ்யா முன் மொழிந்த நீட்டிப்பு கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தத்தில் சீனாவையும் இணைக்க வேண்டுமென்று ரஷ்யாவிடம் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் நடந்த ஆயுதக் குறைப்பு குறித்த ஐநா சபையின் மாநாட்டில் அமெரிக்க ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கான துணைச் செயலாளர் தாமஸ் டினானோ, சீனா அணு ஆயுத சோதனைகளை இரகசியமாக செய்து வருவதாக அமெரிக்காவுக்கு உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில், கடந்த 2020-ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கிழக்கு லடாக்கில் எல்லையில் நடந்த கல்வான் மோதலுக்கு 7 நாட்கள் கழித்து சீனா அணுஆயுத சோதனை செய்தது என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து இந்தியாவின் எல்லையருகே ஜின்ஜியாங் பகுதியில் உள்ள லாப் நூர் தளத்தில், பெரும் நிலை அதிர்வுகளை மறைக்கும் decoupling தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான டன்களில் சீனா அணு ஆயுத சோதனைகளை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

சீனாவை அணு ஆயுத அச்சுறுத்தல் என்று அழைக்கப்படுவதை அமெரிக்கா தொடர்ந்து ஊதிப் பெரிதாக்குகிறது என்று குறிப்பிட்டுள்ள அணு ஆயுதக் குறைப்புக்கான சீனாவின் தூதர் ஷென் ஜியான், இதுபோன்ற தவறான கதைகளை உறுதியாக சீனா எதிர்க்கிறது என்றும் தெரிவித்துள்ளார். கூடுதலாக அணு ஆயுதப் போட்டி மோசமடைவதற்கு அமெரிக்காதான் காரணம் என்றும் குற்றசாட்டியுள்ளார்.

மேலும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், அணுசக்தி சோதனை தடையை சீனா கடைப்பிடிப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அணுசோதனை-தடை ஒப்பந்த அமைப்பு, அணு ஆயுத சோதனையை சீனா செய்ததற்கான எந்த ஆதாரத்தையும் கண்டறியவில்லை என்று அந்த அமைப்பின் நிர்வாகச் செயலாளர் ராபர்ட் ஃபிலாய்ட் Robert Floyd தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருவேளை சீனா ரகசியமாக அணுஆயுத சோதனை செய்திருக்கலாம் என்று ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் நிர்வாக இயக்குனர் டேரில் கிம்பால் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அமெரிக்க வெளியுறவுத்துறையால் வெளியிடப்பட்ட சர்வதேச ஆயுதக் கட்டுப்பாட்டு அறிக்கையில், சீனா அணு சோதனை நடத்தியதாக எந்த குறிப்பும் இடம் பெறவில்லை.

மேலும் சீன இராணுவ முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு கொடுத்த இந்த ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையிலும் சீனா அணு சோதனை நடத்தியதாக பென்டகன் குறிப்பிடப் படவில்லை.

ஏற்கெனவே சீனாவிடம் 600 அணு ஆயுதங்கள் வைத்துள்ளதாக நம்பப்படுகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் சீனாவிடம் 1500 அணுஆயுதங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவிடம் 5,500 க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களும் அமெரிக்காவிடம் 5,044 அணு ஆயுதங்களும் உள்ளன என்று அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

ஆயுதப் போட்டியை நிறுத்த விரும்புவதாக ரஷ்யாவும், அமெரிக்காவும் சீனாவும் வெளியில் சொல்லிவந்தாலும் அந்நாடுகளின் செயல்பாடுகள் அப்படியில்லை.

ஒரு புதிய அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வருமா? என்ற கேள்வி தான் சர்வதேச மக்கள் மனதில் உள்ளது.

Tags: covering up activitiesecret nuclear tests in 2020Leaked nuclear testrussiaamericaGenevanuclear test
ShareTweetSendShare
Previous Post

வந்தே மாதரம் பாடல் – மத்திய அரசு முக்கிய உத்தரவு

Next Post

பாகிஸ்தான் – மலேசியா உறவுக்கு வேட்டு – கச்சிதமாக காய் நகர்த்திய இந்தியா! சிறப்பு தொகுப்பு!

Related News

பாகிஸ்தான் – மலேசியா உறவுக்கு வேட்டு – கச்சிதமாக காய் நகர்த்திய இந்தியா! சிறப்பு தொகுப்பு!

வந்தே மாதரம் பாடல் – மத்திய அரசு முக்கிய உத்தரவு

ராகுல் காந்தி உருப்படியான எந்தக் கருத்துகளையும் முன்வைக்கவில்லை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

அமைச்சர் மூர்த்தியின் கருத்தால் சின்ன உடைப்பு கிராம மக்கள் அதிருப்தி! – போரட்டக்களமாக மாறிய மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

அமைச்சர் மூர்த்தியின் கருத்தால் சின்ன உடைப்பு கிராம மக்கள் அதிருப்தி!

pinal Muscular Atrophy நோயால் பாதிக்கப்பட்ட 1.5 வயது குழந்தை – ஊசிக்கு ரூ.1.5 கோடி ஆகும் என்பதால் பெற்றோர் தவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

கால்வான் மோதலுக்கு பிறகு ரகசிய அணுசோதனை – சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு.. சிறப்பு தொகுப்பு!

அமைச்சர் காந்தியை புறக்கணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – திமுகவுக்குள் சலசலப்பு!

தமிழ்நாட்டில் மட்டும் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளாதது ஏன்..? – பிரவீன் சக்கரவர்த்தி

10 ஆண்டுகளாக நடைபெறும் கழிவுநீர் கால்வாய் பணி – போஸ்டர் ஓட்டி விமர்சித்த பாஜகவினர்!

அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது – காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்!

பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரைவிட அமெரிக்கா மோசமாக நடத்தியது – பாக் அமைச்சர் கவாஜா ஆசிப் வேதனை

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார் – போக்சோவில் அதிரடி கைது

நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழு அமைப்பு!

ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கப்பட்ட திமுக – அண்ணாமலை விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies