மகளா? தங்கையா? : கிம்ஜாங் உன் வம்சத்திற்குள் மீண்டும் வெடித்த வாரிசு புயல் - சிறப்பு தொகுப்பு!
Feb 19, 2026, 02:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளா? தங்கையா? : கிம்ஜாங் உன் வம்சத்திற்குள் மீண்டும் வெடித்த வாரிசு புயல் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2026, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற தனது மாமாவையே நாய்களுக்கு உணவாக்கிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னில் குடும்பத்திற்கு மீண்டும் வாரிசுப் புயல் வீசியுள்ளது… பெற்ற மகளா அல்லது தங்கையா யார் அடுத்த அதிபர் என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.. இது குறித்து ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்..

அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் வடகொரியா, அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை என உலகையே மிரட்டி வருகிறது.. தங்களது நாட்டில் நடப்பதையெல்லாம் வெளியுலகம் அறியாத வகையில் ரகசியமாகவும் வைத்திருக்கிறது… கடுமையான கட்டுப்பாடுகள், கொடூரமான தண்டனைகள் என தனிப்பாதையில் செல்கிறது வடகொரியா…

அங்கு சர்வாதிகார ஆட்சி நடப்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை.. அது உலகறிந்த விஷயம்தான்…கொரிய போருக்குப் பின்னர் கொரிய தீபகற்பம் இரண்டாக உடைந்தது.. அப்போதிருந்தே வடகொரியாவை கிம்ஜாங் உன் குடும்பத்தினரே ஆண்டு வருகின்றனர்.. கிட்டத்தட்ட மன்னர் ஆட்சி போன்றுதான் அங்கு நிலைமை.. கடந்த 2011ம் ஆண்டு தந்தையின் மறைவுக்கு பின்னர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்தான் வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்…

கிம் ஜாங் உன்னுக்கு பின்னர் அவரது சகோதரியான கிம் யோ ஜாங்-தான் ஆட்சி அதிகாரத்திற்கு வருவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.. ஆனால் வடகொரிய அதிபரின் எண்ணம் வேறாக உள்ளது.. அடுத்த அதிபர் யார் என்ற வலுவான கேள்விக்கு மத்தியில், தனது மகள் கிம் ஜுஏ-வை முன்னிலைப்படுத்தி வருகிறார் கிம் ஜாங் உன்.. கிம் வம்சத்திற்குள் மீண்டும் வாரிசு புயல் வீசத்தொடங்கியிருப்பது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

எனினும் வடகொரியாவில் வாரிசு அரசியல் என்பது அவ்வளவு சுலபமானது அல்ல… மன்னராட்சி போன்ற நிலையே அங்கு நிலவுகிறது..

கடந்த 2013ம் ஆண்டு வடகொரியாவில் மிகவும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடந்தன.. தற்போதைய அதிபரான கிம் ஜாங் உன்னின் மாமாவான ஜாங் சாங்- தேக், கடந்த 2013ம் ஆண்டு தேசத் துரோக குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்டார். நீண்ட காலமாக நாட்டின் 2வது நபராகவும், கிம் ஜாங் உன்னிற்கு அதிகாரம் கைமாறியபோது முக்கிய வழிகாட்டியாகவும் இருந்தவர்தான் ஜாங் சாங்-தேக்…

இவ்வளவு செல்வாக்காக இருந்த ஜாங் சாங்- தேக், தொழிலாளர் கட்சிக் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், ராணுவ தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் பளிச்சிட்டன… ஊழல், சூதாட்டம், போதைப்பொருள் பயன்பாடு போன்ற பகிரங்கமான குற்றச்சாட்டுகள் வேறு…

ஆட்சியை கவிழ்க்க சதி என்ற குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால், ஜாங் சாங்-தேக் உடனடியாக தூக்கிலிடப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமான செய்தி நிறுவனமான KCNA பிரேக்கிங் செய்தியை வெளியிட்டது. அவர் வெறுக்கத்தக்க மனித குப்பை.. நாயைவிட மோசமானவர், தேசத் துரோகி என்ற வெறுப்பு பிரசாரமும் பரப்பப்பட்டன… அது மட்டுமின்றி கிம் ஜாங் உன் தனது மாமாவை நிர்வாணப்படுத்தி வெறிபிடித்த நாய்களுக்கு உணவாக்கியதாகவும் உறுதிபடுத்தப்படாத செய்திகள் பரவின..

ஜாங் சாங்-தேக்கின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், பதற்றம் தொற்றிக்கொண்டதால், அவசர பாதுகாப்பு கூட்டத்தை கூட்டியது தென்கொரியா, வடகொரியாவில் அசாதாரண ராணுவ நகர்வுகள் எதுவும் இல்லை என்றாலும், அமெரிக்கா வெளியிட்ட அறிக்கைகளை சந்தேகிக்க எந்தக் காரணமும் இல்லை என்றும் கூறியது..

ஜாங் சாங்-தேக்கின் மரணம் வடகொரியாவின் மிருகத்தனமான ஆட்சிக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என தென்கொரியாவால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. வடகொரியாவின் முதல் நட்பு நாடான சீனா, இந்த விவகாரத்தை உள்நாட்டு விவகாரம் என்று விவரித்தாலும், பொருளாதார உறவுகளை வளர்ப்பதில் ஜாங் சாங்கின் பங்கை கருதி கவலைப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

தற்போது, ​​கிம் ஜாங் உன் தனது மகளை எதிர்காலத் தலைமைக்கு நிலைநிறுத்தக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பியோங்யாங்கில் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக நீண்ட காலமாகக் கருதப்படும் அவரது சகோதரி கிம் யோ ஜாங் மீதும் கவனம் திரும்பியுள்ளது. இதனால் பெற்ற மகளா, சகோதரியா யாரை அடுத்த அதிபராக்க போகிறார் கிம் ஜாங் உன் என்ற எதிர்பார்ப்பும், அதற்கான எதிர்வினைகளும் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

Tags: Korean PeninsulaKim Yo-jongKim dynastynorth koreaUnited StatesNorth Korean President Kim Jong-unNorth Korea political power
ShareTweetSendShare
Previous Post

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது – தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

பிரதமர் மோடியுடன் எஸ்டோனியா அதிபர் அலர் கரிஸ் சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Related News

“ஏழு சகோதரிகள்” மாநிலங்கள் பற்றி பேச்சு : மீண்டும் இந்தியாவை சீண்டிய முகமது யூனுஸ் – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடியுடன் எஸ்டோனியா அதிபர் அலர் கரிஸ் சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது – தமிழிசை சௌந்தரராஜன்

மனித மாமிசத்தை சாப்பிட்ட கொடூரம் : அதிரவைக்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் – சிறப்பு தொகுப்பு!

ஹார்மோஸ் நீரிணையில் ஈரான் கடற்படை போர் பயிற்சி – மத்திய கிழக்கில் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா!

பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு – ஏ.ஐ தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மகளா? தங்கையா? : கிம்ஜாங் உன் வம்சத்திற்குள் மீண்டும் வெடித்த வாரிசு புயல் – சிறப்பு தொகுப்பு!

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் – சட்டப்பேரவையில் காரசார வாக்குவாதம்!

டிரம்ப் அறிவிப்பு எதிரொலி – ரஷ்ய பொருட்கள் இறக்குமதி 40 சதவீதம் குறைவு!

அமெரிக்கா நெருக்கடி : கியூபாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு!

காரமடை அருகே, நீதிமன்ற உத்தரவை மீறி இஸ்லாமியர்களுக்கு தொழுகை நடத்த அனுமதி : இந்து அமைப்புகள் போராட்டம்!

அரசியல் கட்சிகள் பதிவு ரத்து தொடர்பான வழக்கு : தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

இந்துக்கள் எண்ணிக்கை குறைந்தால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு சவாலாக அமையும் – மோகன் பகவத்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை கைவிடவில்லை – திருமாவளவன்

போட்டி போட்டு விருப்ப மனுக்களை பெற்று சென்ற தவெகவினர் – பூர்த்தி செய்து ஒப்படைக்கவில்லை என தகவல்!

இனி எந்த ஜென்மத்திற்கும் திமுகவினர் கோவை மண்ணில் கால் பதிக்க முடியாது – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies