20 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதன் முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளதால், தமிழகத்தில் தேர்தல் களம் சூடும் பிடித்துள்ளது. இந்த நிலையில் தேமுதிகவை கூட்டணியில் இழுப்பதற்காக திமுக மற்றும் அதிமுக சார்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.
யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த், கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
அப்போது அமைச்சர்கள் எ.வே.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் பிரமேலதா விஜயகாந்துக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பின்னர் அவர், திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதன் மூலம் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
















