காங்கிரஸ் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம் என கிண்டலடித்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு, மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மிக கடுமையாகப் பேசுகிறார் எனவும், அவர் பேசும் வார்த்தைகள் எல்லாம் கூட்டணியில் நெருடலை ஏற்படுத்துவதுபோல் உள்ளது எனவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி தொடங்கிய நாள் முதல் கலகக்குரல் எழுப்புவது அவர்களது வழக்கம் என விமர்சித்த வைகோ, காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் கதர் சட்டைகள் கிழிக்கப்படுவது புதிதல்ல என கிண்டலடித்தார்.
வைகோவின் இந்த விமர்சனத்திற்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கூட்டணி குறித்து பேசக் கூடாதென தலைமை சொன்ன ஒற்றை வார்த்தைக்கு மரியாதை கொடுத்து பொறுமையாக செல்கிறேன், பயந்து அல்ல அண்ணன் வைகோ அவர்களே என மாணிக்கம் தாகூர் பதிவு வெளியிட்டுள்ளார்.
















