மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சிறுவனை தெருநாய்கள் துரத்தி கடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், நாய்க்கடி சம்பவங்களும் அதிகரித்தே வருகின்றன…
இதுதொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டியிருந்தாலும், பிரச்சனைக்கான தீர்வு என்னவோ இன்னும் கிடைக்கவில்லை.
கிராமம் முதல் நகரம் வரை தெருநாய்கள் பல்கிப் பெருகியிருக்கும் சூழலில், சிறுவர்களும், பெண்களும் நாய்க்கடிக்கு இலக்காகி வரும் காட்சிகள் நெஞ்சை உலுக்கி வருகின்றன.
அந்த வகையில் புனேவில் உள்ள சைத்ரங்கன் குடியிருப்பு பகுதியில் சிறுவன் ஒருவனை தெருநாய்கள் திடீரென துரத்திக் கடித்தன.
சரியான நேரத்தில் அங்கிருந்த இளைஞர் ஒருவர் நாய்களை விரட்டியதால், சிறுவன் சிறிய காயங்களுடன் தப்பினான். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன..
















