பதவிக்காக ஓபிஎஸ் எதையும் செய்யத் துணிந்துவிட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,MGR, ஜெயலலிதாவுக்கு ஓபிஎஸ் களங்கம் விளைவித்துவிட்டதாக தெரிவித்தார்.
2017ல் திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிமுகவுக்கு எதிராக வாக்களித்தவர் ஓபிஎஸ் என்றும்இ பதவிக்காக ஓபிஎஸ் எதையும் செய்யத் துணிந்துவிட்டார் என்றும், அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்-ஐ நீக்கியது சரியே! என்றும் கூறினார்.
திமுகவுடன் இணைந்து செயல்படும் ஓபிஎஸ்-ஐ தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் தினகரன் குறிப்பிட்டார்.
















