ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக ஆட்சியை மீண்டும் மலர செய்வோம் எதிர்க்கட்சி தலைவர் EPS தெரிவித்துள்ளார் இது குறித்து அவரது பதிவில்
ஜெயலலிதாவின் சூளுரையை நம் மனதிலே தாங்கி, அதிமுக ஆட்சியை மீண்டும் மலரச் செய்வோம் எனவும்
அதிமுக அரசின் சாதனைகளையெல்லாம் திமுக அரசு தங்களது சாதனைகளாக கருதி பொய் பிரச்சாரம் செய்கிறது என கூறியுள்ளார்
பொய் பிரச்சாரம் செய்து வரும் திமுக-வினரின் பிரச்சாரங்களை முறியடிக்கும் அதிமுகவினர் செயல்பட வேண்டும் என கூறினார்
அதிமுக தலைமையிலான கூட்டணியில் யார் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டாலும் அவர்களின் வெற்றிக்காக முழு மூச்சுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும் எனவும் EPS கூறியுள்ளார்
மேலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் செய்திட்ட சாதனைகளை எல்லாம் தமிழக மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துக் கூற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் EPS தெரிவித்துள்ளார்
















