தென்அமெரிக்க நாடான கொலம்பியா நாடாளுமன்றத் தேர்தலில் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கிய வேட்பாளரை போட்டியிடச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கொலம்பியாவில் அடுத்த மாதம் 8ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில், கைத்தானா என்ற ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவான வேட்பாளரை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கருவிகள் வாயிலாக, பூர்வீக குடிமக்களின் குரலை வலுப்படுத்தும் முயற்சியாக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















