கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உடனடியாக ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேறுங்கள் என இந்திய தூதரகம் அவசர சுற்றறிக்கை
அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் கடந்த ஆண்டு ஈரானில் உள்ள ரகசிய அணு ஆயுத தயாரிப்பு தளங்கள் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியது.
இதன் பின்னர் இரு நாடுகளுக்கு இடையிலான போர் எப்போது வேண்டுமானாலும் மூலலாம் என்ற சூழல் தென்படுகிறது. இந்நிலையில் அமெரிக்கா அதன் போர் கப்பல்கள் உள்ளிட்ட தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிகளுக்கு நகர்த்தி வரும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையே உச்சகட்ட பதற்றமான சூழல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஈரான் தலைநகர் டெகரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஈரானில் உள்ள இந்தியர்கள் கிடைக்கும் போக்குவரத்து வாய்ப்புகளை பயன்படுத்தி உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஈரானில் உள்ள இந்திய குடிமக்கள் இந்திய தூதரகத்தோடு தொடர்பில் இருக்க வேண்டும் எனவும், பாதிப்புள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் மோசமாகி வரும் நிலைமை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ஈரானில் உள்ள இந்தியர்கள் எப்போதும் அவர்களது கைகளில் பாஸ்போர்ட், விசா மற்றும் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்கும் மாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இவைத்தவிர ஈரானில் உள்ள இந்தியர்கள் அவர்களது இருப்பிடம் மற்றும் விவரங்கள் உள்ளிட்டவற்றை www.meaers.com/request/home என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு, ஏதேனும் அவசர உதவிக்கு cons.tehran@mea.gov.in என்ற மின்னஞ்சல் மற்றும் +989128109115 , +989128109109 , +989128109102 , +989932179359 என்ற தொலைபேசி எண்களை பயன்படுத்துமாறு இந்திய தூதரகம் இந்தியர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
















