போலாந்து நாட்டிற்கான இந்திய தூதராக நீட்டா பூஷணை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
1994ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜை சேர்ந்த நீட்டா பூஷண், தற்போது நியூசிலாந்தின் உயர் ஆணையராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அவரை போலாந்து குடியரசு நாட்டிற்கான தூதராக நியமித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இப்பொறுப்பை அவர் விரைவில் ஏற்பார் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















