ஜம்மு-காஷ்மீர் மாநிலம், Kishtwar பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Kishtwar மலைப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியில், அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில், தாக்குதலில்,ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
















