சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மத்திய அரசின் CAPF படைகள் மார்ச் 10ம் தேதி தமிழகம் வருகின்றன.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. துணை தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்து டெல்லி திரும்பியுள்ளனர்.
அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. இந்த சூழலில் தமிழக தேர்தல் பணிக்காக CAPF அமைப்பின் 50 படைகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது, இந்த படைகள் மார்ச் 10ம் தேதி தமிழகம் வர உள்ளன.
















