வங்கதேசத்தில் இந்து பெண் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சியில் இருந்தபோது, இந்துக்கள் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், மீண்டும் சிறுபான்மையின இந்துகள் மீது தாக்குதல் தலையெடுக்க தொடங்கியுள்ளது.
புதிய அரசு அமைந்த ஒரு சில நாட்களில் மாற்றுத்திறனாளி இந்து பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
















