சென்னை ஆவடி அருகே, பல ஆண்டுகளாக உள்ள விநாயகர் கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, கையில் தீபம் ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அயப்பாக்கம் விஜிஎன் குடியிருப்பில், சுந்தர விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, அங்குள்ள அசோசியேஷன் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, உத்தரவு வந்துள்ளதாகக்கூறி, வருவாய்த் துறையினர் கோயிலை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள், கையில் தீபம் ஏற்றி நூதன போரட்டத்தில் ஈடுபட்டனர்.
















