நாகையில் தவெக கட்சி நிர்வாகிகளுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த மாவட்ட செயலாளரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் தவெக தலைவர் விஜய் நாகையில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கான செலவு கணக்குகளை, தவெக மாவட்ட செயலாளர் சுகுமாரன் என்பவர், ஒன்றிய அளவிலான நிர்வாகிகளிடம் காட்டவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து சுகுமாரனுக்கும், திருமருகல் ஒன்றிய தவெக நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்கனவே பிரச்னை எழுந்துள்ளது.
இந்நிலையில் தன்னை சந்திக்க வந்த திருமருகல் ஒன்றிய தவெக நிர்வாகிகள் சிலருக்கு, சுகுமாரன் மற்றும் அவரது மகன் ரொனால்டோ உள்ளிட்டோர் இணைந்து மிரட்டல் விடுத்துள்ளனர்.
அப்போது பொதுச்செயலாளரிடம் புகாரளித்தால், கொலை செய்து தலையை வெட்டி சாலையில் வீசுவேன் என அவர்கள் மிரட்டும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
















