சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், மிகவும் எளிமையான தலைவராகவும் விளங்கியவர் நல்லகண்ணு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
இது குறித்து அவரது பதிவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், ஐயா திரு. நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ளார்
மேலும் சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், மிகவும் எளிமையான தலைவராகவும் விளங்கியவர். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்துத் தரப்பு மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவர் என கூறினார்
ஐயா திரு. நல்லகண்ணு அவர்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார்
















