வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான 3 ஆயிரத்து 716 கோடி மதிப்புள்ள மும்பை வீட்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்பட அனில் அம்பானியின் பல்வேறு நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தவில்லை என புகார் எழுந்தது. மேலும் கடன் பணத்தில் முறைகேடாக வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கி நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வங்கி மோசடி வழக்கிர் அனில் அம்பானி குடும்பத்தினா் மற்றும் நிறுவனத்தின் உயரதிகாரிகள் சிலா் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பாலி ஹில் பகுதியில் உள்ள அனில் அம்பானிக்கு சொந்தமான 3 ஆயிரத்து 716 கோடி மதிப்புள்ள 17 மாடி சொகுசு வீட்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
மேலும் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு 15 ஆயிரத்து 700 கோடி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
















