இந்திய மண்ணிலிருந்து ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
நேபாளம் மற்றும் பூட்டான் எல்லைகளைப் பாதுகாக்கும் எஸ்எஸ்பி எனும் இந்திய பாதுகாப்பு படையினர் மத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஒட்டுமொத்த நாட்டையும் ஊடுருவல்காரர்களிடமிருந்து விடுவிக்க மோடி அரசு உறுதி பூண்டுள்ளதாக கூறினார்.
தேச விரோத சக்திகள் அண்டை நாடுகளை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைய முயல்வார்கள் என்பதால், எல்லை பாதுகாப்புப் படையினர் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அமித்ஷா அறிவுறுத்தினார்.
















