ஈரான் மீது போர் எப்போது? - தாமதிக்கும் அமெரிக்கா : தவிக்கும் கடற்படையினர்!
Sep 11, 2026, 10:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் மீது போர் எப்போது? – தாமதிக்கும் அமெரிக்கா : தவிக்கும் கடற்படையினர்!

Manikandan by Manikandan
Feb 26, 2026, 07:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரான் மீது எந்நேரமும் அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்ப்பார்க்கப் படும் நிலையில் அமெரிக்க போர்க்கப்பல் வீரர்களுக்குப் புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. அது அமெரிக்காவுக்குப் பெரிய தலைவலியாக மாறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அழித்தது. தொடர்ந்து பணவீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த தவறிய ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போராட்டங்களை ஒடுக்க இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஈரானில் ஒரு போராட்டக்காரர் கொல்லப்பட்டாலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மத்தியகிழக்கு பகுதியில் தனது இராணுவக் குவிப்பை அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கில் இரண்டு பெரிய விமானம் தாங்கி போர்க் கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. பல போர் விமானங்களைச் சுமந்து செல்லும் கப்பல்கள் என்பதால் இரண்டு போர்க் கப்பல்களிலும் ஆயிரக்கணக்கான மாலுமிகள் மற்றும் சுமார் 5000 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் முதலே உலகின் மிகப் பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டு கடலில் தான் சுற்றிவருகிறது.

முதலில் மத்தியதரைக் கடலுக்குச் சென்ற இந்தப் போர்க்கப்பல், பின்னர் கரீபியன் பகுதிக்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகு மீண்டும் அட்லாண்டிக் முழுவதும் சுற்றி சென்றது. இப்போது USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டு மீண்டும் மத்திய கிழக்கு நோக்கிச் சென்றுள்ளது.

ஈரானுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவும் அந்நாட்டை அணுசக்தி ஒப்பந்தத்தில் தங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கையெழுத்திட வைப்பதற்காக அமெரிக்கா ஈரானை தாக்காமல் நாட்களை கடத்தி வருகிறது.

பொதுவாக, அமைதி காலத்தில் ஒரு விமானம் தாங்கி போர்க் கப்பல் கடலில் 6 மாதங்கள் வரையே நிறுத்தப்பட்டிருக்கும். ஏற்கெனவே 8 மாதங்களாக கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு கப்பலின் கடல் இருப்பு மேலும் 11 மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நீட்டிப்பு குறித்து கப்பல் பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு போர்க்கப்பலின் கட்டளை அதிகாரி டேவிட் ஸ்கரோசி தெரிவித்ததும் கப்பலில் உள்ள அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். விரைவில் வீடு திரும்புவார்கள் என்று ஆசையோடு காத்திருந்த குடும்பத்தினர் ஏமாற்றமடைந்தனர்.

கடந்த ஜனவரி மாதமே போர்க் கப்பலின் பராமரிப்பு வேலைகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாகவும் பல உபகரணங்கள் பழுதடைந்து விட்டதாகவும்,குறிப்பாக போர்க்கப்பலின் பிளம்பிங் அமைப்புகள் மோசமான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வந்தன.

இந்தப் போர்க் கப்பலில் செயல்படாத நிலையில் இருக்கும் பல கழிப்பறைகளைப் பழுது பார்க்கும் பணிகள் 24 மணி நேரமும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், கப்பலில் உள்ள மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.

போர்க் கப்பலின் இயக்கங்கள் நாட்டின் இராணுவ இரகசியம் என்பதால், இந்தக்கப்பலில் உள்ள மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினரிடமும் கூட தொடர்பு கொள்ள முடியாது என்பது தான் உண்மை.

எட்டு மாதங்களுக்கும் மேலாக இப்படி இருப்பதால் போர்க்கப்பலில் இருப்பவர்கள் கடும் கோபமும், வருத்தமும் அடைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 12 மாதங்களாக ஒரு மாலுமி தனது இளம் குழந்தையை விட்டு பிரிந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். மற்றொரு மாலுமி தனது கொள்ளு தாத்தா பாட்டியின் இறுதி நாட்களைத் தவறவிட்டதாக வருத்தப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் பண்டிகைகள் என அனைத்து சந்தோஷங்களையும் தவறவிட்டு நடுக்கடலில் இருக்கும், இந்த மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் கடற்படையில் இருந்து வெளியேறுவது பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: AmericanAmerican warshipsUS expectedWARattackIranus
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவிலிருந்து ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் – அமித்ஷா!

Next Post

உக்ரைனில் உருவாகி வரும் மக்கள் தொகை பேரழிவு – குறையும் குழந்தை பிறப்பு : கேள்விக்குறியான எதிர்காலம்! – சிறப்பு தொகுப்பு

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies