சர்ச்சைக்குரிய பாடத்திட்டத்தை திரும்பப்பெற 2 நாட்களுக்கு முன்னரே NCERTக்கு உத்தரவிட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
NCERT-யின் 8ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நீதித்துறையை பற்றி சர்ச்சைக்குரிய பாடத்திட்டம் உள்ளதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக ஜார்க்கண்டில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீதித்துறையை உயரிய இடத்தில் வைத்து மதிக்கிறோம் எனவும், நீதித்துறையை அவமதிக்கும் நோக்கம் அரசுக்குக் கிடையாது எனவும் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய பாடத்திட்டத்தை திரும்பப்பெற 2 நாட்களுக்கு முன்னரே NCERTக்கு உத்தரவிட்டதாக கூறிய அவர், பாட அத்தியாயத்தை தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.
இது தொடர்பான விவகாரத்தில், அரசின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
















