மேற்கு ஆசியா போர் பதற்றம் - பிரதமர் மோடி அவசர ஆலோசனை
Mar 15, 2026, 04:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு ஆசியா போர் பதற்றம் – பிரதமர் மோடி அவசர ஆலோசனை

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 2, 2026, 06:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் – அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்றிரவு டெல்லியில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தைக் கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார்.

தமிழக பயணத்தை முடித்துவிட்டு நேற்றிரவு 9:30 மணியளவில் டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, உடனடியாக இந்த உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார். இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் மற்றும் வெளியுறவுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் தற்போதைய கள நிலவரம் குறித்து பிரதமருக்கு விளக்கமளித்தனர்.

ஈரான் மீதான தாக்குதல் மற்றும் அந்நாட்டின் உச்சதலைவர் ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சர்வதேச விளைவுகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், ஈரான் மற்றும் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் அவசரக்கால வெளியேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வான்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் துபாய், தோஹா உள்ளிட்ட விமான நிலையங்களில் சிக்கியுள்ள இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டது.

Tags: iran attackediran attack dubaiiran attack rumoriran uae attackiran attack on dubaius attacks iraniran attack israeliran attacks dubaiisrael iran attackus israel iran attackiran attackiran attacks us basesiran attacksiran us bases attackiran attack uaetrump to attack iran
ShareTweetSendShare
Previous Post

ஈரான் எச்சரிக்கையின் பின்னணி : அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் அழிக்கப்படுமா? – சிறப்பு தொகுப்பு!

Next Post

தமிழ்நாட்டிற்கான உட்கட்டமைப்பு நிதி மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies