என்டிஏ கூட்டணியின் அடுத்த பொதுக்கூட்டத்தில் தொகுதி பங்கீடு விபரங்களை அறிவிப்போம் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, பொதுக்கூட்டம் வெற்றி குறித்த ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். தொகுதி பங்கீடு குறித்த தகவல்களை திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிப்போம் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன்,
என்டிஏ பொதுக்கூட்டத்திற்கு திமுக அரசு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். அதிக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது என்றும், எனினும் பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றதாக தெரிவித்தார். எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்றும் எல்.முருகன் குறிப்பிட்டார்.
















