தமிழக அரசு வதித்த பல்வேறு தடைகளை தாண்டி என்டிஏ பொதுக்கூட்டம் வெற்றி பெற்றதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, என்டிஏ பொதுக்கூட்டத்திற்கு திமுக அரசு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். அதிக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது என்றும், எனினும் பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றதாக தெரிவித்தார். என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் என்றும் எல்.முருகன் குறிப்பிட்டார்.
















