சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலால், உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், உலகின் மிகப்பெரிய மற்றும் சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ராஸ் தனூரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான், தாக்குதல் நடத்தியது.
ஈரானின் Shahed-136 வகை ட்ரோன்கள் மோதியதில் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஸ் தனூரா சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அராம்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, பேரலுக்கு 80 டாலரை தாண்டி அதிரடியாக உயர்ந்தது.
கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில், ஒரே நாளில் எட்டு முதல் 13 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.
















