போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் அயதுல்லா அராஃபி தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல், அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக ஈரானில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ரெட் கிரசெண்ட் அமைப்பு அறிவித்துள்ளது.
இதனிடையே ஈரான் தங்களுடன் பேச தயாராக இருக்கிறது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
ஆனால் டபோர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த மதகுரு அயதுல்லா அராஃபி தெரிவித்துள்ளார்.
















