ஈரான் மீதான போர் 4 முதல் 5 வாரங்கள் நீடிக்கும் - ட்ரம்ப் தகவல்!
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் மீதான போர் 4 முதல் 5 வாரங்கள் நீடிக்கும் – ட்ரம்ப் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 3, 2026, 07:34 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரான் மீதான போர் 4 முதல் 5 வாரங்கள் நீடிக்குமென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், அணு ஆயுத கட்டமைப்புகளை மீண்டும் ஏற்படுத்தக் கூடாதென ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அவர்கள் அதனைப் புறக்கணித்து அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஐரோப்பாவையும், வெளிநாடுகளில் அமெரிக்காவின் தளங்களையும் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை ஈரான் பெற்றிருந்ததாகவும், விரைவில் அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளும் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் எனவும் அவர் கூறினார்.

தீய ஆட்சியில் ஏற்படும் அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு இது என்றும், அதனைச் செய்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாதிகளுக்கு மிகப்பெரிய ஆதரவாளராக விளங்கிய ஈரான், அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக மாறியதாக குறிப்பிட்ட அவர், ஈரானின் அணு ஆயுத திட்டங்களை அழித்து விட்டதாகவும் கூறினார். ஈரானுக்கு எதிரான போரில் தங்களின் கணிப்புகளைவிட அமெரிக்கா முன்னேறியுள்ளதாக குறிப்பிட்ட அவர், 4 அல்லது 5 வாரங்களில் போர் முடியும் என திட்டமிட்டுள்ளதாகவும், அதனையும் தாண்டி போர் நீடித்தால் அதற்குரிய வலிமை தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தங்களின் நோக்கம் தெளிவாக உள்ளதாகக் கூறிய அவர், முதலில் ஈரானின் ஏவுகணை கட்டமைப்புகளை அழிக்க வேண்டியிருந்ததால் அதனைச் செய்துவிட்டதாக தெரிவித்தார். அடுத்தது அவர்களின் கடற்படையை அழிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே 10 கப்பல்களை தாக்கி விட்டதாகவும் கூறினார். அணு ஆயுதங்களைப் பெற முடியாத நிலையை இந்த தாக்குதல் ஏற்படுத்தி உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

Tags: iran attackediran attack dubaiiran uae attackiran attack on dubaius attacks iraniran attacks dubaiiran attack israelus israel iran attackisrael iran attackiran attacks us basesiran attackiran us bases attackiran attackstrupmpiran attack uaeiran war timing
Share
Tweet
SendShare
Previous Post

ஜெருசலேமில் ஈரான் ஏவுகணை தாக்குதல் – பெஞ்சமின் நெதன்யாகு நேரில் ஆய்வு!

Next Post

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை – அயதுல்லா அராஃபி தகவல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies