மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பர்வத மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்காததால் காவல்துறையினருடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பர்வத மலை மீது நண்பகல் ஒருமணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்திருந்தது.
இந்நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்களை மலை மீது ஏற அனுமதிக்க வேண்டுமென காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
















