நீடிக்கும் ஈரான் போர் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆயுதப் பற்றாக்குறை!
Mar 15, 2026, 01:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீடிக்கும் ஈரான் போர் – அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆயுதப் பற்றாக்குறை!

Manikandan by Manikandan
Mar 4, 2026, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிரப்படுத்தியுள்ளன. வெடிமருந்துகள் மற்றும் ட்ரோன்கள் விரைவாகக் குறைந்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

முந்தைய 12 நாட்கள் நடந்த போரில் 500-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஏராளமான ட்ரோன்களை ஏவி தாக்குதல்களை நடத்திய ஈரான் இம்முறை அந்த அளவுக்கு எதிர் தாக்குதல் நடத்தவில்லை.

நூற்றுக்கணக்கான ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் பெரிய அளவிலான பாதுகாப்பை அமைத்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு அருகில் அமைந்துள்ள வளைகுடா நாடுகளில் மட்டுமே சில இலக்குகளை ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் தாக்க முடிந்ததாக கூறப்படுகிறது.

போர் தொடங்கியதும் ஈரானின் பதிலடி கொடுக்கும் திறனைக் கட்டுப்படுத்துவதையே முதல் நோக்கமாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் வைத்திருந்தன.

ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள், ட்ரோன் உள்கட்டமைப்புகள் விமானத் தளங்கள் உள்ளிட்ட முக்கிய ராணுவத் தலைமையகங்கள் மற்றும் ராணுவத் தளங்கள் குறிவைத்து தாக்கி அழிக்கப்பட்டன.

இந்நிலையில், கடுமையான மற்றும் துல்லியமான தாக்குதல்கள் இன்னும் சில நாட்களுக்குத் தடையின்றி தொடரும் என்றும், மத்திய கிழக்கு முழுவதும், உலகம் முழுவதும் அமைதி என்ற இலக்கை அடையும் வரை ஈரான் மீதான போர் நடவடிக்கை தொடரும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

குறைந்த உயர அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பேட்ரியாட் ஏவுகணைகளைப் பயன்படுத்தியே ஈரானின் தாக்குதல்களை நடுவானிலேயே இடைமறித்து அமெரிக்கா அழித்துள்ளது.

அதே நேரத்தில் பூமியின் வளிமண்டலத்துக்கு வெளியே உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் துல்லியமாக அழிக்கும் திறனுடைய ஸ்டாண்டர்ட் SM-3 ஏவுகணைகளையும் அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. மேலும், டோமாஹாக் க்ரூஸ் ஏவுகணைகளையும் ஏவி ஈரானின் முக்கிய இலக்குகளை அமெரிக்கா அழித்துள்ளது.

ஏற்கெனவே ஆபரேஷன் ரஃப் ரைடர் என்ற பெயரில் ஏமனில் ஹவுதி பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் நைஜீரியாவில் கிறிஸ்துவர்களை இனப் படுகொலை செய்யும் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைப் போலவே ஈரான் மீதான Operation Epic Fury என்ற போர் நடவடிக்கையிலும் இராணுவ யுக்திகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

ஈரானிடம் உள்ள ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில் ட்ரம்ப் இன்னும் சில வாரங்களுக்குப் போர் நீடிக்கும் என்று அறிவித்திருப்பது இஸ்ரேலுக்கும் ஒரு இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

காரணம் கடந்த மூன்று ஆண்டுகளாக, ஹமாஸ், ஈரான், ஹிஸ்புல்லா, ஹவுதி தீவிரவாதிகள் என தொடர்ந்து போர்க்களத்திலேயே இருக்கும் இஸ்ரேலுக்கு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து அழிக்கும் ஆயுதங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்தச் சூழலில் கூடுதல் ஏவுகணைகள் மற்றும் இடைமறிப்பான்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

Tags: uscountriesattacksIsraelWeaponsIranDrones
ShareTweetSendShare
Previous Post

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு – சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!

Next Post

பாதி எரிந்த விறகுகளை வீசி ஹோலி பண்டிகையை கொண்டாடிய மக்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies