தமிழகத்தில் நிலவும் போதை கலச்சாரத்தால் இந்த தலைமுறை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர்,போதை பொருள் புழக்கத்தை தடுப்பதில் முதல்வர் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளதாக தெரிவித்தார். அமெரிக்க கிடைக்கும் உயரிய போதை பொருள் கூட சென்னையில் கிடைப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பானவர்கள் தாங்கள் தான் என்றும் அன்புமணி குறிப்பிட்டார்.
















