சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில், விஜய்யும் நடிகை த்ரிஷாவும் ஒன்றாக கலந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை திருவான்மியூரில் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜயும், நடிகை த்ரிஷாவும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
இருவரும் ஒரே நிறத்தில் பட்டாடை அணிந்துபடி ஒரே காரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், நடிகை ஒருவருடன் தனது கணவர் விஜய் முறையற்ற உறவில் இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் திருமண விழாவில் நடிகை த்ரிஷாவுடன் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
















