திருச்சி அருகே நாய்க் குட்டிகளை கொடூரமாக கொன்ற பெண் குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பரசம்பேட்டை அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த நாய்க் குட்டிகளை ஒரு பெண் எடுத்து சுவரில் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், அந்தப் பெண் கால்நடைகளையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், விலங்கு நல ஆர்வலர் அமைப்பு சார்பில் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் மீனாட்சி மிஸ்ரா என்ற பெண்ணை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















