லேசர் ஆயுதங்களை பயன்படுத்தும் அமெரிக்கா..நொடியில் எரிந்து சாம்பலாகும் ட்ரோன்கள்..சிறப்பு தொகுப்பு!
Jun 21, 2026, 01:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லேசர் ஆயுதங்களை பயன்படுத்தும் அமெரிக்கா..நொடியில் எரிந்து சாம்பலாகும் ட்ரோன்கள்..சிறப்பு தொகுப்பு!

Manikandan by Manikandan
Mar 7, 2026, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா லேசர் ஆயுதங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்த ஆயுதங்கள் குறித்தும், அவற்றின் துல்லிய தன்மை குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஈரான் உடனான போரில் THAAD, Patriot போன்ற ஏவுகணை தடுப்பு அமைப்புகளையும், ‘ஸ்டெல்த்’ (Stealth) ரக போர் விமானங்களையும், SM-3 ஏவுகணைகளையும் அமெரிக்கா அதிகளவில் பயன்படுத்தி வருகிறது. மேலும், நிலத்திற்கு அடியில் உள்ள இலக்குகளை தாக்க 30,000 பவுண்டு எடையுள்ள Bunker Buster-களையும், ஏவுகணை ஏவுதளங்களை கண்காணிக்க Space Force அமைப்பையும் உபயோகப்படுத்தி வருகிறது.

இந்த சூழலில், ஈரானின் தாக்குதல்களை முறியடிக்க லேசர் ஆயுதங்களையும் அமெரிக்கா தற்போது பயன்படுத்த தொடங்கியுள்ளது. இது தொடர்பான வீடியோவை அந்நாட்டின் கடற்படை வெளியிட்டுள்ளது. அதில், HELIOS எனப்படும் அதிநவீன லேசர் ஆயுத அமைப்பின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த HELIOS அமைப்பானது, அதிகபட்சமாக 120 கிலோவாட் வரை அதிக ஆற்றல் கொண்ட லேசர் கற்றைகளை வெளியிடும். அந்த லேசர் ஒளியை எதிர்கொள்ளும் எதிாி நாடுகளின் ட்ரோன்கள், சிறிய ரக படகுகள் உள்ளிட்டவை நொடிப்பொழுதில் உருகி விடும் அல்லது எரிந்து சாம்பலாகி விடும்.

அத்துடன், தாக்க வரும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மீதும், சென்சார்கள் மீதும் இந்த லேசர் அமைப்பு அதிகப்படியான ஒளியை செலுத்தும். இதனால், ட்ரோன்களும், ஏவுகணைகளும் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவே செயலிழக்கும் சூழலுக்கு தள்ளப்படும்.

HELIOS லேசர்கள் சிறந்த கண்காணிப்பு அமைப்பாகவும் விளங்குகின்றன. இவற்றை பயன்படுத்தி தொலைதூரத்தில் உள்ள எதிர்படைகளின் நடமாட்டத்தையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். ஒரு ஏவுகணையை வாங்க பல கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், இந்த லேசர் தாக்குதலை நடத்த ஒரு சில டாலர்கள் இருந்தாலே போதும். மின்சார சேமிப்பு இருக்கும்வரை, தொடர்ந்து லேசர் தாக்குதல்களை நடத்திகொண்டே இருக்கலாம். இதனால், அமெரிக்காவுக்கு பல லட்சம் டாலர்கள் மிச்சமாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த லேசர்கள் ஒளியின் வேகத்தில் பயணிப்பதால், இலக்குகளை ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் தாக்கி அழிக்கின்றன. கடந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க கடற்படை இந்த HELIOS லேசர் அமைப்பை கொண்டு பரிசோதனை ஒன்றை மேற்கொண்டது. கடல் பகுதியில் நடத்தப்பட்ட அந்த சோதனையின்போது ஒரே நேரத்தில் 4 ட்ரோன்களை லேசர் கதிர்வீச்சு தாக்கி அழித்தது. இது லேசர் ஆயுதங்களின் சோதனையில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்பட்டது.

இந்த சூழலில்தான், ஈரானுக்கு எதிரான போரில் லேசர் ஆயுதங்களை அமெரிக்கா கையில் எடுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக பேராசிரியரான டேவிட் ஜியார்னிக், ஈரானின் ஏவுகணைகளை கண்டறியவும், அவற்றை வழிமறித்து அழிக்கவும் இந்த லேசர் தாக்குதல் முக்கிய பங்கு வகித்து வருவதாக கூறியுள்ளார்.

ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவையாக லேசர் ஆயுதங்கள் உருவெடுத்துள்ளது ஒரு புரட்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: SM-3StealthshipaircraftIranUS ArmyMISSILEBunker BusterSpace Force
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

போதை மாடல் அரசால் பெண்கள் பாதுகாப்பை களவாடும் கயவர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies