100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை - சிறப்பு தொகுப்பு!
Jun 20, 2026, 09:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 20, 2026, 08:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதிரி பாகங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலை மாறி, 100 சதவீதம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பாகங்களை இந்தியா வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பாகிஸ்தானும், சீனாவும் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வரும் சூழலில், நவீனப் போர் வியூகங்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில், நாட்டின் பாதுகாப்புக்காக சூப்பர் சானிக் ஏவுகணையை உருவாக்க முடிவெடுத்த இந்தியாவின் வெற்றியே பிரம்மோஸ் ஏவுகணை.

ஏற்கெனவே கண்டம் விட்டு கண்டம் தாவும் அக்னி, பிருத்வி உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகள் இருந்தாலும் தனித்துவமும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக பிரம்மோஸ் ஏவுகணை திகழ்கிறது.

தாழ்வான உயரத்தில் சீறிப் பாய்ந்து இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஒலியைவிட 3 மடங்கு வேகத்தில் செல்லும் பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை, அமெரிக்கா வைத்துள்ள அதிநவீன ஏவுகணைகளை விட 9 மடங்கு அதிவேகம் கொண்டதாகும்.

உலகில் எந்த நாட்டிடமும் இல்லாத சூப்பர் சூப்பர் சானிக் ஏவுகணையான பிரம்மோஸ், இந்தியாவின் முப்படைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் பிலிப்பைன்ஸ், ஆர்மேனியா, வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகள் பிரம்மோஸை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன.

கடந்த 1998-ம் ஆண்டு இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்தியாவின் DRDO மற்றும் ரஷ்யாவின் NPOM இணைந்து நிறுவிய Brahmos Aerospace கூட்டு நிறுவனமே பிரம்மோஸ் ஏவுகணையைத் தயாரிக்கிறது.

ஆரம்பத்தில் ரஷ்யாவிலிருந்து பூஸ்டர்களை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. ஆனால் 2018-ல் ரஷ்யாவுடன் தொழில்நுட்பப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 2022-ல் சோலார் இண்டஸ்ட்ரீஸ் மூலம் உள்நாட்டிலேயே இவற்றைத் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது. மாதம் ஒரு பூஸ்டர் என்ற நிலையிலிருந்து தற்போது மாதம் சுமார் 60 பூஸ்டர்கள் தயாரிக்கும் அளவுக்கு உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக் கிழமை நாக்பூரில் உள்ள சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆலையில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைக்காக 100-வது உள்நாட்டு பூஸ்டர் வெற்றிகரமாக தயாரிக்கப் பட்டுள்ளது.

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தலைவர் ஜெய்தீர்த் ஜோஷி மற்றும் சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் சத்யநாராயண் நுவால் ஆகியோர் இந்த 100-வது உள்நாட்டு பூஸ்டரை அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.

தொடர்ந்து, போர்முனைப் பகுதியும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு சோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைவதற்கான முயற்சியில் இந்த வளர்ச்சி மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

Tags: BrahMos missile componentsintercontinental-range AgniIndiarussiaMake in indiabrahmos missile
ShareTweetSendShare
Previous Post

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

Next Post

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீனா சமாளித்தது எப்படி? சிறப்பு தொகுப்பு!

மேகதாது தனித்தீர்மானம் – திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு!

திமுக அரசின் தவறுகளை காரணம் காட்டி, தவெக அரசும் மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது – நயினார் நாகேந்திரன்

யோகா செய்வதால் என்ன நன்மை? – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விளக்கம்!

பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட விவகாரம் – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்!

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல் – சீமான் பொதுவேட்பாளர்?

வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது – அண்ணாமலை

மேகதாது அணை விவகாரம் – முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்!

மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies