நீலாங்கரை வீட்டில் தான் வசிக்க விஜய் அனுமதி மறுப்பதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் அவரது மனைவி சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க விஜய்க்கு உத்தரவிடக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில் நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதி மறுப்பதால், தான் சென்னையில் வீடின்றி தவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க விஜய் அனுமதிக்க வேண்டும் என்றும்
விஜய் வசிக்கும் நீலாங்கரை இல்லத்தில் தனக்கு சரிபாதி உரிமை உள்ளது என்றும் சங்கீதா தெரிவித்துள்ளார்.
நீலாங்கரை வீட்டில் வசிப்பதற்கு அனுமதி கோரினால் வழக்கறிஞர் மூலமாக விஜய் தரப்பு மிரட்டுவதாகவும்,தான் லண்டனைச் சேர்ந்தவர் என்பதால் வேறு எங்கும் தங்க அனுமதியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய், தனக்கும் தன் குழந்தைகளுக்கும் சேர வேண்டிய நியாயமான ஜீவனாம்சத்தை வழங்க வேண்டும் என சங்கீதா தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அரசியல் சூழல் கருதி பலமுறை சுமூகமாக விவாகரத்து பெற முயற்சி செய்தபோதும், அதற்கு விஜய் மறுத்து வருவதாக சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார்.
















