தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, மத்திய பாதுகாப்பு படையினர் சென்னை வந்தடைந்தனர்.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ளது. இந்தநிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக CRPF எனப்படும் மத்திய பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட உள்ளனர்.
இதையொட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துர்கா பூரிலிருந்து இருந்து CRPF பட்டாலியனைச் சேர்ந்த 66 வீரர்கள் சென்னை வண்ணாரப்பேட்டைக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்கள் அங்கு உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே சென்னை கே.கே.நகர் சமுதாய நலக்கூடத்தில் 72 வீரர்களும், கிண்டியில் 72 வீரர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
















