குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே உலகை ஆளும் காலம் முடிந்துவிட்டதாகவும், பல நாடுகள் அதிகார மையங்களாக இருக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் கலந்து கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சர்வதேச அரசியல் இனி ஒரு சில நாடுகளின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்காது என தெரிவித்தார்.
பல நாடுகள் அதிகார மையங்களாக திகழும் சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறினார்.
ஒரு சில நாடுகள் ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டு, பிற நாடுகள் அதற்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்ற பழைய நடைமுறைக்கு, உலகம் இனி திரும்பாது என்று கூறிய ஜெய்சங்கர், சர்வதேச ஒத்துழைப்பு என்பது தற்போதைய அதிகாரப் பரவலுக்கு ஏற்ப மாற வேண்டுமே தவிர, அதை எதிர்க்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
















