கச்சா எண்ணெய் விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், வெளிநாடுகளில் இருந்து உத்தரவுகளைப் பெறுபவர்கள் இந்திய மக்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், தொலைதூர வெளிநாட்டுக் கரைகளிலிருந்து வரும் உத்தரவுகளை ஏற்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் திறமைக்கு ஏற்றவாறு உங்கள் சொந்த வேலையைச் செய்ய வேண்டுமென்றும் டிரம்ப்புக்கு கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
















