ரஷ்யாவின் புதிதாக உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
மேற்காசிய நிலவரம் காரணமாக, ரஷ்யாவிடமிருந்து ஏற்கெனவே கப்பல்களில் ஏற்றப்பட்ட கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கிக் கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்தது.
இந்நிலையில் தேவைப்பட்டால் ரஷ்யா புதிதாக உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெயையும் வாங்கிக்கொள்ள அனுமதி வழங்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சா் கிரிஸ் ரைட், மேற்காசிய நிலவரம் காரணமாக எண்ணெய் விலை பலமடங்காக உயா்வதை தடுக்க இடைக்கால நிவாரண நடவடிக்கையை அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
















