சென்னை பல்லாவரம் அருகே சிறுவன் உட்பட இரண்டு பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரம் அருகே முடிச்சூரை சேர்ந்த ஆறுமுகம் என்ற இளைஞர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர் சிறையில் இருந்து வெளியே வந்து திரிசூலத்தில் ஒரு குடிசை வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில், அங்கு வந்த எட்டுக்கும் மேற்பட்டோர் அடங்கிய மர்ம கும்பல், ஆறுமுகத்தையும், அவருடன் இருந்த 17 வயது சிறுவனான சதீஷையும் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரின் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆறுமுகம் மீது கொலை வழக்கு பின்புலம் இருப்பதால், இந்த கொலைக்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
















