தருமபுரி அருகே முன்விரோதம் காரணமாக பட்டியலினத்தைச் சேர்ந்தவரின் விவசாய நிலத்தை தீ வைத்து எரித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நைனாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவருடைய விவசாய நிலத்தை வேலுமணி, சண்முகம், காளி ரத்தினம், ஜடையா உள்ளிட்டோர் ஆக்கிரமிக்க முயன்றதாக ஜோதி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தநிலையில், அவர்கள் ஜோதியின் விவசாய நிலத்திற்கு தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதனால் தேக்கு, மாமரங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன.
ஜோதி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















