கேரளத்தில் ஒரு ரூபாய்க்கு காலணி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் காலணி கடையில் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது.
கோழிக்கோட்டில் உள்ள ஒரு காலணி கடை, தனது விளம்பரப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, தன் கடைக்கு வந்து ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுக்கும் முதல் 100 பேருக்கு காலணி என்று அறிவித்திருந்தது.
இந்த சலுகை குறித்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் கடையின் முன்பு குவிந்தனர். சலுகையைப் பெறுவதற்காக அதிகாலை 2 மணி முதலே மக்கள் அங்கு வரிசையில் நிற்க தொடங்கினர். இதனால் கூட்டம் அலைமோதி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நிலைமை கைமீறும் அளவுக்கு சென்றதால் கூட்டத்தைக் கலைக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர்
















