கோவையில் பேருந்து நிலையத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்ட கேரள இளைஞர்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜித்து சாஜி என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து கோவை பேருந்து நிலையத்தில் நடனமாடி வீடியோ பதிவேற்றம் செய்தார்.
அதில் சேலை அணிந்த படியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் நடனமாடிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் யூடியுபர் ஜித்து சாஜி நேரில் ஆஜராகுமாறு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
















