நாஸ்ட்ராடாமஸ் தீர்க்க தரிசனம் - செப்டம்பர் வரை ஈரான் போர் நீடிக்கும் என கணிப்பு
Mar 15, 2026, 01:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாஸ்ட்ராடாமஸ் தீர்க்க தரிசனம் – செப்டம்பர் வரை ஈரான் போர் நீடிக்கும் என கணிப்பு

Manikandan by Manikandan
Mar 9, 2026, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நான்கைந்து வாரங்கள் ஈரான் மீதான போர் நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் வரை போர் நீடிக்கும் என பிரான்ஸ் நாட்டுத் தீர்க்க தரிசி நாஸ்ட்ராடாமஸ் எழுதிய புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல், பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரானின் தாக்குதல் என மத்திய கிழக்கு போரில் சிக்கியுள்ள நிலையில் உலகமே அச்சத்தில் உள்ளது.

இந்தப்போர் ஐந்து வாரங்கள் வரை நீடிக்கும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில் 1555-ல் ( Les Propheties ‘லெஸ் ப்ராபெட்டீஸ்’ ) என்ற தனது நூலில் பிரான்ஸ் நாட்டு தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ், ஏழு மாதப் போர் பற்றி எச்சரித்துள்ளார்.

465 வருடங்களுக்கு முன் நாஸ்ட்ராடாமஸ் எழுதிய இந்த நூல் நூறு செய்யுள்கள் கொண்ட தொகுதிகளாக ‘நூற்றாண்டுகள்’ (centuries) என்று அழைக்கப்படுகிறது. இந்த நூற்றாண்டின் 26ம் ஆண்டாக இந்த ஆண்டு வருகிறது. எனவே 26-வது செய்யுளில் இந்த ஆண்டில் என்னென்ன நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

“ஒரு பெரிய மனிதன் பகலில் ஒரு இடியால் வீழ்த்தப்படுவான்.” என்று நாஸ்ட்ராடாமஸ் ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து தேனீக்களின் பெரும் கூட்டம் எழும், அவை எங்கிருந்து வந்தன என்று ஒருவரும் அறிய மாட்டார்கள்.” என்று திரள் ட்ரோன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏழு கப்பல்களைச் சுற்றி போர்க் கப்பல்கள் புறப்படும்; ஒரு மரணப்போர் வெடிக்கும். என்று கூறியுள்ளார். இது சீனா தைவான் போரை குறிக்கிறது என்று கூறப்படுகிறது.

இதுபோல பல கணிப்புகளைப் பதிவு செய்துள்ள நாஸ்ட்ராடாமஸ் முக்கியமாக ஏழு மாதம் பெரும் போர், தீமையால் மக்கள் இறந்தனர், மன்னர் தோல்வியடைய மாட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

இது மத்திய கிழக்கில் நடக்கும் ஈரான் போர் வரும் செப்டம்பர் வரை நீடிக்கும் என்று ட்ரம்ப் கூறியதுடன் ஒத்து போவதாக கருதப் படுகிறது.

இதற்கிடையே நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஈரான் மீது தாக்குதல் நடத்த அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டது சட்ட விரோதமானது என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் இது தொடர்பாக கடந்த புதன் கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த போர் அதிகாரத் தீர்மான வாக்கெடுப்பில் குடியரசுக் கட்சியினர் 47-53 வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானத்தை தோற்கடித்தனர்.

வாக்கெடுப்புக்கு முன்னதாக மத்திய கிழக்கில் என்றென்றும் போர்களால் சோர்வடைந்த அமெரிக்க மக்களுடன் நிற்கிறீர்களா அல்லது ட்ரம்ப் மற்றும் பீட் ஹெக்செத் ஆகியோர் நாட்டை இன்னொரு போருக்குக் கொண்டு தள்ளும் போது அவர்களுடன் நிற்கிறீர்களா?” என்று ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷுமர் கேள்வியெழுப்பினார்.

ஈரான் போர் தொடரும் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவின் நிதியிலிருந்து 1 பில்லியன் டாலர் காணாமல் போகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Tags: NostradamusWARIranFrenchTrumpus president
ShareTweetSendShare
Previous Post

₹3.55 கோடி செலவில் அமைக்கப்பட்ட மின்தூக்கிக்கள் வேலை செய்யவில்லையா..? -அண்ணாமலை சரமாரி கேள்வி!

Next Post

பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை – மத்திய அரசு மீண்டும் உறுதி!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies